வடிவேலு நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் டைட்டில் மறுக்கப்பட்டதா? அதிரடி முடிவு எடுத்த படக்குழுவினர்…!


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என்று மாஸ் ஹீரோக்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கவுண்டமனி, செந்தில் ஆகியோருடன் இணைந்து ஏராளமான நகைச்சுவை காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். இன்றும், வடிவேலுவின் டயலாக்கை வைத்து மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர்.

வடிவேலு நடிப்பில் வந்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் அடுத்த பாகம், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் உருவாக இருந்தது. இந்தப் படத்தில் வடிவேலு நடிக்க மறுத்த நிலையில், புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது

தற்போது பல தடைகளை தாண்டி மீண்டும் படங்களில் நடிக்க இருந்த தடை நீக்கப்பட்டது. லைகா நிறுவனத்தின் 5 திரைப்படங்களில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் அவற்றில் ஒன்று சுராஜ் இயக்கும் ’நாய் சேகர்’ என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் சதீஷ் நடிக்கும் படத்திற்கு ஏற்கனவே நாய் சேகர் என்ற டைட்டிலை பதிவு செய்துவிட்டதால் வடிவேலு நடிக்கும் படத்திற்கு அந்த டைட்டில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேச்சு வார்த்தை நடந்த போதும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே சுராஜ் – வடிவேலு இணையும் இந்தப் படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பு மாற்றப்படலாம் என தெரிகிறது. ஆனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16 September, 2021, 7:36 pm

Views: -

0

0

More Stories