“Money Heist” ரீமேக்தான் அட்லி-ஷாருக்கான் படமா?

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கிய ஸ்டார் இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கவிருக்கும் ஹிந்தி படம் ஒன்றை இயக்கி வருகிறார். .
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். அது தவிர தற்போது தமிழ் காமெடி யோகிபாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறுகிறார்கள். ஏற்கனவே அட்லி இயக்கத்தில் மெர்சல், பிகில் என்ற படங்களில் யோகிபாபு நடித்திருந்தார்.
இந்நிலையில் மும்பையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கடித வடிவில் வேண்டுகோள் கேட்கப்பட்டது. அதில் ஷாருக்கான், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ‘லயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தின் டைட்டில் லயன் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த படம் ஒரு Bank-ஐ பெண்களுடன் கூட்டணி அமைத்து ஹீரோ கொள்ளை அடிக்கும் கதையம்சம் கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வலம் வருகிறது. என்னடா இது எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதே அது வேறு எதுவும் இல்லை, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற டைட்டிலில் வெளிவந்த நிலையில் அந்த கதையின் இந்திய உரிமையை ஷாருக்கான் வாங்கி உள்ளதாகவும் அந்தக் கதையைத்தான் அட்லி தனது பாணியில் டெவலப் செய்து இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.

Views: -

0

0