அப்பவே அஜித்துடன் தீனா படத்தில் நடித்த பிரபல இயக்குநர் : அடடே பிரம்மாண்ட படத்தோட டைரக்டர் ஆச்சே!!


தல இந்த ஒரு வார்த்தை சொன்னாலே அரங்கமே அதிரும் . அந்தளவுக்கு அந்த வார்த்தைக்கு அவ்ளோ பவர் இருக்குனா அதுக்கு காரணம் தல அஜித்.

தனது கடின உழைப்பால் உச்சத்திற்கு சென்ற நடிகர்களில் அஜித்திற்கு தனியிடம் உண்டு. பைக் ரைடராக வலம் வந்த அஜித், சினிமாவில் நடிக்க முயற்சித்த போது பல ஏமாற்றங்களை கண்டு, கஷ்டத்தை பார்த்து துவண்டு போகாமல் தனது கடின உழைப்பால் உச்சத்திற்கு வந்தவர்.

எதிர் விமர்சனங்களை தூக்கி வீசி தலைக்கனம் இல்லாமல் தனக்கென தனிபாணியை உருவாக்கியவர். இதனால் அவரது ரசிர்கள் தல என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இவது கேரியரில் தவிர்க்க முடியாத படமாகவும், காதல் பாணியில் இருந்து ஆக்ஷன் பாணிக்கு திரும்ப வைத்த படமாக அமைந்ததுதான் தீனா.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான முதல் படமான தீனா திரைப்படத்தில் சுரேஷ்கோபி, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படமும் பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் ரவுடியாக நடித்திருப்பார் அஜித்.

தல என்ற பெயர் வந்ததும் இந்த திரைப்படத்தில் இருந்துதான். இந்த படத்தின் ஒரு காட்சியில் காபி ஷாப்பில் அஜித் மற்றும் லைலா அமர்ந்து பேசிக்கொண்டிருப்பர். அப்போது ஒரு குரூப் லைலாவை கிண்டல் செய்யும் விதமாக காட்சி அமைந்திருக்கும்.

அந்த காட்சியில் அஜித் தான் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்தும் வைக்கும் சீனுக்கு இன்று வரை அப்ளோஸ் உள்ளது. மாஸாக அஜித் வரும் காட்சியில் சுற்றியுள்ளவர் அடி வாங்குவர். அந்த சீனில் 5 பேர் இருப்பார்கள். அதில் ஒருவர் தான் மலையாளத்தில் படு மாஸ் காட்டிய பிரேமம் திரைப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.

I Wanted Premam To Be Like A Poem: Alphonse Putharen On Five Years Of The  Classic Starring Nivin Pauly

ஆரம்பத்தில் பல தமிழ் குறும்படங்களை இயக்கிய அவர், துணை நடிகராக சில படங்களில் தோன்றியிருப்பார். இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடதக்கது.

23 October, 2021, 2:44 pm

Views: -

0

0

More Stories