என்னங்கடா ENPT போஸ்டரை ரீலீஸ் பண்ணிருகீங்க ! தனுஷ் – கார்த்திக் நரேனின் மாறன் பட போஸ்டர்…!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய இரு படங்கள் சமீபத்தில் வெளியானது. கர்ணன் படத்தில் தனக்கான முத்திரையை பதித்து அதன்பின் Greyman என்னும் ஹாலிவுட் Web சீரிஸ்க்காக California சென்றார். இந்தநிலையில் கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது

இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் தற்போது டி43 படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஜனவரி 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மாறன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. போஸ்டரை பார்த்தால் ஆக்சன் படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் பேசி வரும் நிலையில், படத்தை பற்றி அப்டைட் வந்துள்ளதால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். ஆனாலும் என்னை நோக்கி பாயும் தோட்டா கெட்டப் மாதிரி இருக்கே என ரசிகர்கள் முணுமுணுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

28 July, 2021, 11:43 am

Views: -

3

1

More Stories