“மாநாடு ட்ரைலர் அதிரும்” Simbu கொடுத்த மாநாடு UPDATE


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால்அது சிம்பு தான். இவருடைய படங்கள் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இது எவ்வளவு தான் சர்ச்சைகள் நிகழ்ந்தாலும் இவருக்கான ஆதரவாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவரின் காதல் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவருடைய சமீப கால படங்கள் ரிலீசாவதில் அடிக்கடி சிக்கலை சந்தித்தன. இவருடைய போன படமான “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் படுதோல்வி. அதன் பிறகு ரிலீசான ஈஸ்வரன் படமும் கைவிட்டது. இப்போது மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்துதல படம் தயாராகி வருகிறது. இதில் வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபில்ம் தயாரிக்கிறது.

இப்போது வலிமை படத்தின் அப்டேட்டுகள் வந்துகொண்டிருக்க திடீரென்று மாநாடு படத்தின் அப்டேட் எதுவும் வரவில்லையே என்று சிம்பு ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். அதை போக்கும் வகையில் தற்போது சிம்பு ஒரு ட்வீட் செய்துள்ளார். அதாவது மாநாடு டிரைலர் விரைவில் உங்களை வந்தடையும் என்று அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை டப்பிங் தியேட்டரில் இருந்து வெளியிட்டுள்ளார் இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

26 September, 2021, 9:01 pm

Views: -

0

0

More Stories