மாநாடு படம் கொரியன் பட காப்பி என ட்வீட்டிய தனியார் ஊடகம்…! வெங்கட்பிரபு நறுக் பதில்..!

தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு திரைப்படம், தற்போது பண்டிகைக்கு பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் கொரியன் படத்தின் காப்பி என ஒரு தனியார் ஊடகம் செய்தி பரப்பியது. அதை மறுக்கும் விதமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவும் அதற்கு பதிலளித்துள்ளார்.
தனியார் ஊடகம் வெளியிட்ட ட்வீட்டிற்கு பதிலளித்த அவர், சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்திலேயே அந்த தனியார் ஊடகம் ட்வீட்டை டெலிட் செய்து விட்டது.

Views: -

0

1