மனைவி வந்த நேரம் சினேகனுக்கு அடித்த LUCK..! Top Hero படத்தில் சினேகன் !


தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களுக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. அதில் முக்கியமானவர் பாடலாசிரியர் சினேகன். சமீபத்தில் தான் சினேகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் இயக்குனர் ஹரி படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடலாசிரியர் சினேகன் சில படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியின் பிக் பாஸில் கலந்துகொண்ட சினேகன் அதன்பின் கமல் ஆரம்பித்த மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்த சினேகனுக்கு சமீபத்தில் கல்யாணம் நடந்தது. தனது காதலியான கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே தனது மனைவியுடன் ஷூட்டிங் சென்று புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ளார்.

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தூத்துக்குடியில் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சினேகன். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், கல்யாணம் திருப்பம் தரும் என்று சொல்வது சரியாகத்தான் இருக்கிறது என கூறியிருக்கிறார். 8 வருடத்திற்கு முன் தனது காதலியுடன் எடுத்த படத்தையும் மகிழ்ச்சியில் பகிர்ந்துள்ளார் சினேகன். மேலும் அவரது திருமணத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

4 August, 2021, 8:11 am

Views: -

0

1

More Stories