சில விஷயங்களை நீங்கள் டச் பண்ண கூடாது..! குஷ்பு ஓப்பன் டாக்..!

1

1990 ஆம் ஆண்டு கமல் குஷ்பு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன் இந்த படத்தில் கமல் 4 கெட்டப்புகளில் நடித்து இருப்பார். இந்த படத்தில் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடல் பயங்கர ஹிட் ஆனது. அந்த பாடலை சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தில் ரிமாஸ்டர் செய்து படத்தில் சேர்த்திருந்தார்கள். இதிலும் இந்த பாடல் பட்டிதொட்டி என சமூக வலைதளத்தில் பெரிய ரீச் ஆனது.

இதுகுறித்து ஒரு பேட்டியில் குஷ்பு கூறியதாவது, ஒரு பாடலை முடிவு செய்யக்கூடாது என யாரும் சொல்ல முடியாது ஆனால் சில விஷயங்களை தொடாமல் இருப்பதே சிறந்தது என அவர் கூறியுள்ளார். மேலும் ரம்பம்பம் ஆரம்பம் பாடலை ரீமிக்ஸ் செய்தாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் ஏனென்றால் அது வெறும் டான்ஸ் பாடல் தான்.

ஆனால் இந்த பாடல் திரைக் கதையை மையமாக வைத்து வெல்லப்பட்ட கதையை கிளைமேக்ஸை நோக்கி நகரும் வகையில் எடுக்கப்பட்ட பாடல். இந்த பாடலை கம்போஸ் செய்ய எவ்வளவு பாடுபட்டார்கள் என அருகில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். இப்போது போல் அப்போது சமூக வலைதளங்களில் இருந்திருந்தால் இந்த பாடல் இதைவிட பெரிய ஹிட்டாகி இருக்கும். அந்த பாடலின் பாட்டு என சொல்ல முடியாது இந்த பாடலை கேட்டால் எல்லாருக்கும் கமல் பாட்டு என்று தான் ஞாபகத்திற்கு வரும் என்று கூறினார்.

12 October, 2021, 8:37 pm

Views: -

0

1

More Stories