கெத்தா நடந்து வரார்… கேட்டயேல்லாம் கடந்துவரார் – விமானத்தில் இறங்கி மாஸா POSE கொடுத்த சூப்பர்ஸ்டார்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரஜினிக்கும் சரி, நெல்சனுக்கும் சரி மிக முக்கியமான படமாகும். இருவருக்கும் தற்போது கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்பதால் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து நம்பியிருக்கின்றனர்.

இந்நிலையில் ரஜினி ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு மலாதீவுக்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். அதற்காக அவர் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலத்தீவுக்கு சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினி செம மாஸாக இருப்பதை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். இந்த புகைப்படங்களை அந்த விமான நிறுவனமே வெளியிட்டு அவருக்கு நன்றி கூறி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Views: -

0

0