அமலாபால் தயாரித்து நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு..! பாராட்டி ட்வீட் போட்ட பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்


தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது.

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் ! இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு ப்ரேக் விட்ட அமலா பால் தொடர்ந்து படம் நடிக்க ஆரம்பித்தார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி வந்தவர் தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதில் முதல் படமாக தானே நடித்து வருகிறார். கேடவர் என்று பெயரிடப்பட்ட படத்தில் பிணவறையில் சாப்பாட்டுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இதை ட்வீட் செய்து பாராட்டியுள்ளார்.

26 October, 2021, 8:00 pm

Views: -

13

3