பிக் பாஸ் காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணமா? “தப்பா எடுத்துக்காதீங்க” மன்னிப்பு கேட்ட காஜல் !

1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே நுழைந்தவர், அதன்பின் சில நாட்களில் வெளியேறி, அதன்பின் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தவர் காஜல் பசுபதி. மெளனகுரு உட்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவ்வபோது சில சர்ச்சைகளில் சிக்கி ஊடகங்களில் அடிபடுபவர். இவர் பிக்பாஸ் போட்டியாளர், டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முதல் மனைவி ஆவார்.

இந்நிலையில் ட்விட்டரில் தனக்கு திருமணம் என்று போஸ்ட் போட்டதால் மக்கள் ஷாக்காகி உள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு திருமணம் நிச்சயம் செய்யபட்டுள்ளது. அடுத்த வாரம் திருமணம்.. கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியவில்லை.. தப்பா எடுத்துக்காதீங்க. மேலும் மாப்பிள்ளை யார் என்ற கேள்விக்கு சன்பென்ஸ் பொறுத்திருந்து பாருங்கள் என்று காஜல் பசுபதி கூறியுள்ளார்.

மேலும் சிலர், இது ஏற்கனவே வேறொருவர் பதிவு செய்த டுவிட் என்றும் காஜல், காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

2 July, 2021, 12:28 pm

Views: -

0

0

More Stories