எவன்டா கிளப்பி விட்டது?.. என்னுடைய வருங்கால கணவர் இவரா? வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!


கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

keerthy suresh - updatenews360

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

keerthy suresh_Updatenews360

இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் கடைசியாக நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தனது நெருங்கிய நண்பன் ஃபர்ஹான் பின் லியாகத்தை கட்டியணைத்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

ஃபர்ஹான் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர் கீர்த்தி சுரேஷின் நீண்டநாள் நெருங்கிய நண்பர். அண்மையில் கூட கீர்த்தி சுரேஷ் தனது நண்பர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்றும் அவரைத்தான் காதலித்து திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக கிசு கிசுக்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அந்த நபர் தான் இவரா? என எல்லோரும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த புகைப்படம் வைரலானதை கவனித்த கீர்த்தி சுரேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் புகைப்படத்தில் இருப்பவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் அவர் தனது வருங்கால கணவர் இல்லை என்றும் தெளிவாக கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய வாழ்க்கை துணை பற்றிய தகவலை தானே கூறுவேன், அதுவரை பொறுமையாக இருங்க என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

22 May, 2023, 5:44 pm

Views: -

0

0

More Stories