“பையா 2” ஹீரோ இவரா? அப்போ ஹீரோயினா அவங்கள போடுங்க – ரசிகர்களை குஷி ஆக்கிய லேட்டஸ்ட் தகவல்!

தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து முன்னணி நடிகராக மார்க்கெட் பிடித்தவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா. இப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

இப்படத்தில் படத்தில் வரும் தமன்னா பெங்களூரிலிருந்து மும்பைக்கு வேலையில்லாத கார்த்தியால் ஓட்டிச் செல்லப்படுகிறார். அப்போது அவர்களைத் துரத்தும் கும்பல்களைத் தவிர்க்க வேண்டும். அந்த பயணத்தில் ஹீரோயின் மீது ஹீரோவுக்கு காதல் ஏற்பட்டு அதை எப்படி வெளிப்படுத்தினார் என கதை நகரும். இப்படத்தில் கார்த்தி , தமன்னாவின் ஜோடி மிகச்சிறப்பாக இருந்தது. அந்த படத்தில் இருவரும் உண்மையிலேயே காதலித்தார்கள். ஆனால், அவர்கள் காதலுக்கு சிவகுமார் எதிர்ப்புகள் தெரிவிக்க பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது சுமார் 13 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. விரைவில் துவங்க உள்ள இப்படத்தில் கார்த்தி தான் ஹீரோவாக நடிக்கிறாராம். இதை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் அப்போ ஹீரோயினா திரிஷாவை போடுங்க என கோரிக்கை வைத்து வருகிறார்கள். கார்த்தி – திரிஷாவின் கெமிஸ்ட்ரி பொன்னியின் செலவன் படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திரிஷா தான் தற்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார்.
Views: -

0

0