இந்த மனமத ராசாவ காட்டுறதுக்கு அவ்வளோவ் சீன்’அ? ஒருவழியா காதலனின் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா!

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருந்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

சமீபத்தில் திடீரென இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். திருமணம் செய்யாமலே காதலன் யார் என்று அறிவிக்காமலே கர்ப்பமான செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆனால், இதுவரை அவர் தனது காதலனின் புகைப்படத்தை வெளியிடாமல் மறைமுகமாக வைத்திருந்தார். இந்நிலையில் காதலரின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ள இலியனா. இந்த மன்மதராசாவை தான் இத்தனை நாள் காட்டாமல் பொக்கிஷமா வச்சிருந்தீங்களா என ட்ரோல் செய்து வருகிறார்கள்.
Views: -

20

16