அந்த டார்ச்சர் தாங்க முடியல.. – கேரவனில் கதறி அழுத அஞ்சலி..!

1

2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகை அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

anjali-updatenews360

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் நடிகை அஞ்சலி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார். அந்த நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கெரியரை கவனிக்க முடியாமல் போனதால் அந்த உறவு தவறான உறவு என தெரிவித்துள்ளார்.

anjali-updatenews360

கேரியருக்கு தடையாக இருக்கும் உறவை விட கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிறந்தது என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். நடிகை அஞ்சலி தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

அதன் காரணமாக தான் அஞ்சலி படங்களில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை அஞ்சலியே இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. நெருக்கமான காட்சியில் நடிப்பது கடினமா அல்லது முத்தம் கொடுக்கும் கட்சியில் நடிப்பது கடினமா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை அஞ்சலி உடனே தான் அந்தரங்க காட்சியில் நடிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார்.

anjali-updatenews360

நான் எல்லா காட்சிகளிலும் நடிப்பதாகத்தான் எண்ணுகிறேன். ஆனால் அது ஒரு நெருக்கமான அந்தரங்க காட்சியாக வரும் போதுதான் அது என்னுடைய எல்லையை மீறி செல்லும் போது சில சமயங்களில் நான் கேரவனுக்குச் சென்று அழுதிருக்கிறேன். ஆனால் நான் ஒப்புக்கொண்ட பிறகுதான் அந்த காட்சி எடுக்கப்பட்டு இதனால் நாம் அதனை நடித்து கொடுத்தான் ஆக வேண்டும்.

anjali-updatenews360

முத்தக் காட்சியை பற்றி பேசும்போது அஞ்சலி கூறியது `ஒரு சில சமயங்களில் அந்த வகையான காட்சிகள் நம்மை தூண்டிவிடுமாறு இருக்கும், ஆனால் நம்முடன் நடிக்கும் நபர்கள் ஒரு கட்டத்திற்கு மேலே செல்ல மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் இதனை நான் மக்களின் முன்பு நடிக்கிறோம் எப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு குறைவாக ஆட்கள் இருந்தாலும் குறைந்த பட்சம் 15 பேர் இருப்பார்கள் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு உறவில் இருந்ததாக கூறிய அஞ்சலி நான் ஒரு Toxic உறவில் இருந்தேன். அந்த உறவின் பெயரை நடிகை அஞ்சலி குறிப்பிடவில்லை.

7 June, 2023, 1:15 pm

Views: -

0

0

Tags: anjali
More Stories