கமல் முதல் அப்பாஸ் வரை “அல்வா” கொடுத்த இடுப்பழகி.. சிம்ரனின் சர்ச்சைக்குரிய லவ் லைஃப் ..!

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

சிம்ரன் இளம் வயதில் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். முதன் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்தாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து விஐபி என்ற படத்தில் நடித்திருந்தனர். அப்பாஸ் சிம்ரனை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து ராஜு சுந்தரம் உடன் காதலித்தாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்த காதலும் பிரிவில் முடிந்ததாம். ராஜு சுந்தரம் பிரபு தேவாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்போ நயன்தாரா எப்படியோ அந்த மாதிரி தான் சிம்ரன் அந்த சமயத்தில் இருந்தார். எல்லோரையும் ஈஸியா நம்பி விடுவார்.

பின்னர் தீபக் பக்கா எனபவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாசனுடன் திருமணத்திற்கு முன்பு நடிகை சிம்ரன் உறவில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் கமல் சிம்ரனை டேட்டிங் செய்ததாக தகவல் வெளியானது.

மேலும், இது முதலில் வதந்தி என நினைத்து பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு பேட்டியில் சிம்ரனிடம் கமலஹாசனை காதலித்தது என்னாச்சு? என கேட்டு உள்ளார். அதற்கு சிம்ரன் இருவருக்குள்ளும் எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் என்னுடைய சொந்தப் பிரச்சனை பற்றியும், குடும்பப் பிரச்சினை பற்றியும் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என சிம்ரன் வாய்விட்டுள்ளார்.

இதேபோல் தான் கமலும் சிம்ரன் இடையேயான காதலைப் பற்றி முன்னணி வார பத்திரிகை ஒன்று ஒரு பெரிய கவர் ஸ்டோரி எழுதியதை பார்த்து கடுப்பான கமல், ‘ஏண்டா என் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்கிறீங்க’ என கடுமையாக சாடினார். ஆனால் கடைசி வரை தான் அதை செய்யவில்லை என்று கமல் சொல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Views: -

0

0