வலிமை First Look வெளியாவதற்கு முன்பே, அதிரடியான விலையில் முடிந்த வியாபாரம் ! தலைக்கு மட்டுமே சாத்தியம் !


தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தின் பூஜை மாஸ்டர் படத்தின் பூஜையின்போது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. ஆனால் மாஸ்டர் படம் முடிக்கப்பட்டு வெளியாகி தற்போது விஜயின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட வெளிவந்துவிட்டது.

ஆனாலும் வலிமை படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வராததால் தல ரசிகர்கள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைவரையும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வருகின்றனர். ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கறாராக அப்டேட் எதுவும் விடுவதாயில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், Motion Poster இம்மாதமே வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் Spain நாட்டில் எடுக்க இருந்த மீதமுள்ள சண்டைக் காட்சி ஒன்று இம்மாதம் ஹைதராபாத்தில் தொடங்க திட்டமிட்டு உள்ளார்கள். இதை விட சூப்பர் அப்டேட் என்ன என்றால், வலிமை படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ், தியேட்டர் உரிமை, எல்லாம் அதிரடியாக விற்கப்பட்டுள்ளது என கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமான தகவல் வந்துள்ளது. எனவே அஜித் ரசிகர்கள் முதல்பார்வை வெளியாவதற்கு முன்பே வியாபாரம் ஆகிவிட்டது என்று காலரை தூக்கிவிட்டு இருக்கிறார்கள்.

4 July, 2021, 10:01 am

Views: -

0

0

More Stories