பாடகர், குணச்சித்திர நடிகர் மாணிக்க விநாயகம் மரணம் !


“சில விஷயங்களை Technical-ஆ தான்யா Moveபண்ணனும்..” கிரி படத்தில் மாணிக்க விநாயகம் பேசும் வசனம் ஏக பிரபலம். இவர் பாடகர் மட்டுமின்றி குணச்சித்திர நடிகருமாவார்.

மாணிக்க விநாயகம் அவர்கள் இன்று மரணமடைந்துள்ளார்.இவருடைய மரண செய்தி தமிழ் திரையுலகை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகில் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் பிரபலமானவர் மாணிக்க விநாயகம். இவர் பாடிய ‘கண்ணுக்குள்ள ஒருத்தி, கொடுவா மீசை, விடை கொடு எங்கள் நாடே, உள்ளிட்ட பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. மேலும், இவர் பாடிய ஆன்மீக பாடல்கள் எல்லாம் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தது.

26 December, 2021, 9:15 pm

Views: -

0

0

More Stories