Europe-ல் நடக்கும் Football Match-இல் வலிமை Update கேட்ட தல ரசிகர்கள் – வைரல் Photo !

1

H. வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரேயொரு ஆக்‌ஷன் காட்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது. பைக் ஸ்டண்ட் காட்சிக்கு படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருக்கின்றனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

வலிமை படத்தைப்பற்றி தலைப்பைத் தவிர எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இதனால் பொறுமை இழந்த ரசிகர்கள் அரசியல்வாதிகள் விளையாட்டு வீரர்கள் என கண்ணில் படும் எல்லோரிடமும் வலிமை பட அப்டேட் கேட்டு வருகின்றனர். கோவையில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் தான் ஜெயித்தால் வலிமை மை படத்தின் அப்டேட் வாங்கி தருவதாக வாக்குறுதி தரும் அளவிற்கு ரசிகர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

அதன்பிறகு அருள்வாக்கு சொல்லும் சாமி கிட்ட கூட அப்டேட் கேட்டுவிட்டார்கள் ஒன்றும் நடந்த பாடில்லை. இதை எல்லாம் மிஞ்சும் விதமாக ஒரு PHOTO ஒன்று வைரலாகி வருகிறது. ஐரோப்பாவில் நடக்கும் கால்பந்தாட்டப் போட்டியில் சென்ற தல ரசிகர் ஒருவர் அங்கு வழிகேட்டு ஒரு பலகையை தூக்கி காட்டியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது தல ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவி வருகிறது.

8 July, 2021, 11:39 am

Views: -

1

0

More Stories