சமந்தாவுக்கு 2 வது முறையாக டும் டும் டும்?..- மாப்பிள்ளை RRR பட பிரபலமாம்..!


அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

samantha_updatenews360

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

தனிடையே, சினிமா, ஆன்மீகம் போன்றவற்றில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும், தற்போது நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா, 2 வது திருமணம் செய்ய தயாராகியுள்ளார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் RRR திரைப்பட தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவின் மகன் கல்யாணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் திருமணம் தேதி எல்லாம் போடப்பட்ட நிலையில் திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது.

samantha - updatenews360

இறுதியில் இது வெறும் வதந்திதான் என தெரிய வந்துள்ளது. மேலும் RRR திரைப்பட தயாரிப்பாளரின் மகன் கல்யாண் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிரா என்ற படத்தின் மூலமாக சினிமாவுக்குள் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kalyan_updatenews360

23 May, 2023, 7:17 pm

Views: -

0

0

Tags: Samantha
More Stories