வலிமை படத்தின் Double Update : அஜித் ரசிகர்களுக்கு Double Treat Guaranteed !

1

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தின் பூஜை மாஸ்டர் படத்தின் பூஜையின்போது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. ஆனால் மாஸ்டர் படம் முடிக்கப்பட்டு வெளியாகி தற்போது விஜயின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட வெளிவந்துவிட்டது.

ஆனாலும் வலிமை படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வராததால் தல ரசிகர்கள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைவரையும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வருகின்றனர். ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கறாராக அப்டேட் எதுவும் விடுவதாயில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவல்களின்படி வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமன்றி மோஷன் போஸ்டரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் மோஷன் போஸ்டரை பின்னணி இசை இல்லாமல் பார்த்த சிலர், “யுவனின் இசை இல்லாமலே இப்படி இருக்கே, இசை சேர்ந்தால் எப்படி இருக்கும் ?” என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

2 July, 2021, 9:49 am

Views: -

0

0

More Stories