நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததே அவனுக்காகக் தான்..! கதறி அழுத தாமரைச்செல்வி


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.. போட்டியாளர்கள் மோதல் கிளம்பியுள்ள தான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். குரூப் குரூப்பாக சேர்ந்துள்ளதால் வரும் வாரம் விறுவிறுப்பாக போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களாக போட்டியாளர்கள் தங்களது சொந்தக் கதையை கூறிவரும் நிலையில் தற்போது தாமரைச்செல்வி தனது கதையை கூறி அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளார்.

தற்போது வெளியான ப்ரோமோவில் அவர் கூறுகையில், என் பையனை காண்பிக்கவே இல்லை. நான் அவனை தேடி போனேன் அவர்கள் என்ன சொன்னார்களோ தெரியவில்லை அவன் அங்கே இருந்து கொள்வதாக கூறி விட்டான். நான் உன்னை பிரிந்த ஆறு மாதத்திற்குப் பின் ஆகிவிட்டது. அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நான் படும் கஷ்டங்கள் அவன தெரியாமலே போய்விடும் என்று எனக்கு பயமாக இருக்கிறது. என்னிடம் என் பையன் பேசுவதை இல்லை பார்ப்பதே இல்லை. நான் தப்பு செய்துவிட்டார் என்று தோன்றுகிறது அவரை காப்பாற்றுவதற்காக தான் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தேன் என்று கூறினார். அவரது கதை உருக்கமாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

13 October, 2021, 9:19 pm

Views: -

2

0

More Stories