Don பட இயக்குனர் மீது வழக்கு பதிவு ! டான் படப்பிடிப்பில் அதிரடியாக நுழைந்த போலீஸ் !

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர் ‘ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் வினய் ஒரு முக்கிய வேடத்தில் வினய் மற்றும் யோகி பாபு நடிக்கிறார்கள். அடுத்த படமான அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இந்த வருடத்தின் கிறிஸ்துமஸ் பரிசாக வரவுள்ளது.
இந்த இரு படங்களையும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்திற்காக இணைந்துள்ளனர்.
தற்போது, தனது அடுத்த படமான டான் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்த வருடம் இந்த படத்தை வெளியிட சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிவாங்கி, எஸ். ஜே. சூர்யா, சூரி, ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஆனைமலையில் உள்ள ஆற்றுப்பாலம் பகுதியில் நடந்து வருகிறது.
இந்த தகவலை கேள்விபட்டு அங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூட்டமாக திரண்டனர். மேலும் அந்த இடத்தில் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் கூட்டத்தை கலைத்தனர். படகுழுவினரை விசாரித்ததில், அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த முறையாக அனுமதி பெறாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மற்றும் படகுழுவினர் 18 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Views: -

0

0