கல்லூரி படிப்பை பாதியில் விட்டதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் தான்: கார்த்திக் நரேன் !

தான் கல்லூரி படிப்பை கைவிட்டதற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம் துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை இயக்குனர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்களுள் ஒருவர் கார்த்திக் நரேன். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படத்தை இயக்கினார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் சிறிது காலம் கழித்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். நரகாசுரன் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்தார். ஆனால் அந்த படம் சில பிரச்சனைகள் காரணமாக வெளிவரவில்லை.
மேலும் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் மாறன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. தற்போது நடிப்பில் வெளியாகியுள்ள நவரசா படத்தில் ப்ராஜெக்ட் அக்னி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.

அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட கார்த்திக் நரேன் தான் மெக்கானிக்கல் என்ஜினீயர் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது ஜிகர்தண்டா படம் வெளியானது என்றும், அந்த படத்தில் வரும் பொட்டிக்கடை பழனி என்ற கதாபாத்திரத்தை பார்த்துதான் இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Views: -

2

0