பிளாஸ்டிக் சர்ஜரி செய்த கீர்த்தி ஷெட்டி?.. புதிய லுக்கால் குழம்பிப் போன ரசிகர்கள்..!

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் குறைந்த படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 19 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல்.
இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வரும் ரசிகர்கள்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டி தன்னுடைய அழகை மெருகேற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி விளக்கம் கொடுத்து உள்ளார்.

அதில் “தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதால் உப்பென்னா படத்தில் இருந்தது போல் தன் முகம் இல்லை என்கிறார்கள் என்றும், நடிகைகள் மேக்கப் போடுவதால் முகத்தில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான் எனவும், வயசு அதிகரிக்கவும் உடலில் மாற்றங்கள் ஏற்படும்” என தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Views: -

1

0