மகள் ஸ்ருதி ஹாசனை வீட்டை விட்டு துரத்தினாரா கமல்…? ஷாக்கிங் தகவல்!

1

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்பா ஸ்டார் நடிகராக இருப்பதால் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறீர்களா என கேட்டதற்கு, அதெல்லாம் இல்லைங்க… அப்பா பெரிய ஸ்டார் நடிகர் தான். ஆனாலும் நான் அவரிடம் பணத்தேவைகளெல்லாம் கேட்கவே மாட்டேன். 21 வயசில நான் அப்பா வீட்டை விட்டு வந்துட்டேன். இப்போது என்னை நானே தான் பார்த்துக்கொள்கிறேன். பொருளாதார ரீதியாக உதவி வேண்டுமானால் அப்பா இருக்கிறார் தான். ஆனால் அவரையே சார்ந்து நான் இல்லை. நான் அப்பாவிடம் பண உதவியெல்லாம் கேட்கவே மாட்டேன் என கூறியுள்ளார்.

17 July, 2023, 10:07 pm

Views: -

1

2

More Stories