சன்னி லியோன் எப்படி தெரியுமா? சன்னி லியோனுடன் நடித்த குக் வித் கோமாளி நடிகை பதிவு ..!

1

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார் தர்ஷா குப்தா. ஆனால் தான் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்காகவே மக்களால் நன்கு அறியப்பட்டார். இவர் கவர்ச்சி படங்களுக்காக ரசிகர்கள் அவ்வப்போது காத்து கிடக்கின்றனர்.

தற்போது ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ள தர்ஷா குப்தா விற்கு அடுத்தடுத்த படங்கள் வரிசையில் இருக்கின்றது. ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்து வரும் தர்ஷா குப்தா, சதீஷ் மற்றும் சன்னி லியோனுடன் நடித்து வருகிறார். சன்னி லியோனுடன் நடித்த அனுபவத்தை பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், சன்னி லியோன் மிகவும் இனிமையான, கனிவான இதயம் கொண்ட அழகான பொம்மை போன்ற பெண். அவருடன் பணிபுரிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் அடுத்த படமான ஓ மை கோஸ்ட் படத்தை நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என பதிவிட்டுள்ளார். அத்துடன் அவருடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

22 October, 2021, 6:29 pm

Views: -

1

0

More Stories