மறைந்த நடிகர் விவேக் நடித்த கடைசி Comedy நிகழ்ச்சி ! சூர்யா நெகிழ்ச்சி !


தமிழ் திரைப்பட உலகின் சிறப்பான நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் விவேக். இவரது நகைச்சுவை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும். இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பதால் இவரை சிலர்  ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞர்’ என்றும்  அழைக்கப்படுகிறார். ஏன் ” பத்மஸ்ரீ ” விவேக் என்று கூட அழைப்பார்கள்.

1990ம் ஆண்டின் தொடக்கத்தில் பாலச்சந்தரின் இயக்கத்தில் துணைநடிகராக தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர், தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.எல்லாரையும் சிரிக்க வைத்த விவேக் தற்போது நம்முடன் இல்லை என்பது வேதனையின் உச்சம்..

இப்போது நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் “நடிகர் விவேக் அவர்கள் எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழ்வார். அவர் மிகவும் மதிக்கத்தக்க ஒரு நடிகர். அவரது கடைசி நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிடுவதில் எனக்கு மிகவும் பெருமை என்று பதிவு செய்துள்ளார்”, இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில், குக் வித் கோமாளி புகழ் பெண் வேடத்தில் நடித்துள்ளார் என்பதும், விவேக்குடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

14 August, 2021, 11:32 am

Views: -

0

1

More Stories