“பத்தினியா? இல்லையான்னு இப்படிதான் கண்டுபிடிபீங்களா….?” சின்மயி மீண்டும் சர்ச்சை


தமிழ் திரைத்துறையில் உள்ள பெண்கள் மட்டுமில்லாமல் எல்லா தரப்பு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு குரல் கொடுத்தவர் பாடகி சின்மயி. சில வருடங்களுக்கு முன் பின்னணி பாடகி சின்மயி, வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக அணுகினார் என குறிப்பிட்டிருந்தார். இவரை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்தனர்.

இவர் பாடிய பாடல்கள் மூலம் Famous ஆனதை விட, பாடலாசிரியர் வைரமுத்து மீது MeToo புகார் கூறியதன் மூலம் பிரபலமானார். அது உண்மையா பொய்யா என்று இரண்டு வருடங்களாக பஞ்சாயத்து ஓடி கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, பாடகர் கார்த்திக் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூட புகார் அளித்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு விஷயத்தை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பீரியட்ஸால் ஏற்பட்ட வயிறு வலி காரணமாக ஒரு நாள் பள்ளிக்கு லீவு எடுத்த மாணவியை ஆசிரியர் ஒருவர் ஏன் பள்ளிக்கு வரவில்லை என கேட்டு, அவர் வாயாலேயே காரணத்தை திரும்ப திரும்ப சொல்ல வைத்த கொடூரம் ஒன்றை பற்றி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியுள்ளதை சின்மயி அம்பலப்படுத்தினார்.

முதலிரவின்போது பெண்களுக்கு ரத்தம் வந்தால் தான் அவர் கன்னிப்பெண் என்றும் அப்படி இல்லையென்றால் அந்த பெண் மோசமானவள் என்று சொல்பவர்களை காட்டிலும் மோசமானவர்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது.

அந்த இடத்தில் இருக்கும் ஒரு டிஸ்யூ தான் ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை முடிவு செய்யும் என நம்புவது முட்டாள் தனம். ஓடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும், சைக்கிள் ஓட்டும் போதும் உட்பட காரணங்களால் அந்த டிஸ்யூ கிழிந்து விட வாய்ப்பு உள்ளது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

https://www.instagram.com/tv/CStrPMZIBxQ/?utm_medium=copy_link

26 August, 2021, 9:26 pm

Views: -

0

0

More Stories