BREAKING : அஞ்சான், விஜய்க்கு எழுதிய கதையா ? மனம்திறந்த லிங்குசாமி

நடிகர் லிங்குசாமி ஒரு காலத்தில் Most Wanted இயக்குனராகவும் நம்பிக்கையான தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் அஞ்சான் படத்தில் இயக்குனராக முரட்டு அடி கிடைத்தது பின், உத்தம வில்லன் தோல்வியின் காரணமாக அவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் தன் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் திரைப்படம் தான் சீமான் விஜய்க்காக எழுதிய கதை பகலவன் என சீமான் ஏழு வருடங்களுக்கு முன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் நான் திரு.விஜய் திரு. விக்ரம் திரு. ஜெயம் ரவி, ஜீவா அவர்களுக்கு சொன்ன கதை ஆன பகலவன் தான் தற்போது அதே சாயலில் அஞ்சான் என்று லிங்குசாமி சூர்யாவை வைத்து எடுக்க இருக்கிறார். எனவே அந்த படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு நியாயம் வாங்கி தர வேண்டும் என்று சீமான் சில வருடங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து லிங்குசாமி அவர்கள், “சூர்யா அவர்களுக்கு நான் ஆறு மாதம் முன்பே கதை சொல்லி விட்டேன் அடுத்த மாதம் படப்பிடிப்பு செல்ல இருக்கிறோம் இனிமே என்னால் எதுவும் செய்ய இயலாது” என்று லிங்குசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதன் பிறகு நடந்த சமரசத்தின் படி இருவரும் எந்தவித ஆட்சேபனையும் இன்றி, ஒருவரை ஒருவர் நட்பு பாராட்டி, இது வேறு கதை என்று முடிவுசெய்து படத்தை எடுக்க ஆரம்பித்தார் லிங்குசாமி. அதன் பிறகு நடந்த சம்பவங்கள் எல்லோருக்கும் தெரியும். இது குறித்த இயக்குனர் சங்க அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.

Views: -

0

0