அந்த நேரத்தில் தான் சினிமா வாய்ப்புகளை மறுத்தேன்…! இளம் சீரியல் நடிகை ஓப்பன் டாக்..!


என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

அந்த வரிசையில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஹிமா பிந்து. ஆந்திராவை சேர்ந்த இவரது குடும்பம் சினிமா பிண்ணனி கொண்டது. இதனால் சிறு வயதில் இருந்தே டான்ஸ், ஆக்டிங், சிங்கிங் என பல விஷயங்களை கற்றுக் கொண்டார். பேஷன் டிசைனிங் படித்துக் கொண்டிருந்த போதே சினிமா வாய்ப்புகள் வந்தது. ஆனால் வீட்டில் மறுத்ததால் நடிக்க முடியவில்லை.

பின் இறுதியாண்டு படிக்கும் போது ஐ ஆர் 8 என்ற படத்தில் நடித்தார். அதன்பின் சில பட வாய்ப்புகளும் வந்தன. தற்போது இதயத்தை திருடாதே சீரியல் முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகம் வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருக்கிறது. முக்கியமாக சிவா – சஹானா ஜோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக சுற்றி கொண்டிருக்கிறார் அம்மணி. இவரது புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

30 August, 2021, 5:33 pm

Views: -

0

0

More Stories