“விடமாட்டேன் அவளை..” சவால் விட்ட நமிதா, சமாதானத்துக்கு தயாரான தாமரைச்செல்வி !

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 இந்தமுறை வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு என்று தான் சொல்ல வேண்டும். எப்போதும் பிரியங்காவிடம் ஓரண்டை இழுக்கிறார் நம்ம விமர்சகர் அபிஷேக்.
இருவருக்கும் லைட்டாக உரசி கொண்டதை நாம் பார்த்திருப்போம், அதாவது சின்ன பொண்ணு என்னும் பாடகி பிக்பாஸ் உள்ளே நுழைய, அதை பார்த்தும் பார்க்காதது போல் சாப்பிட்டுக்கொண்டிருந்த பிரியங்காவை “நீங்க அவங்களுக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு சாப்பிடலாம் ஒன்னும் ஆகாது” என்று கிண்டலடித்துள்ளார் அபிஷேக். இதைக்கேட்ட பிரியங்கா லைட்டாக கோபம் அடைந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சற்று முன் வெளியான ப்ரோமோ வீடியோவில், நமிதா மாரிமுத்து கடுமையான கோபத்துடன் தாமரை செல்வி-யை விடவே மாட்டேன் என்று கூறுகிறார். என்னை பார்த்து “உனக்கென்ன 40 குழந்தைகள் இல்ல 400 குழந்தைகளை கூட நீ வளரப்பமா..” என்று ஏளனமாக சிரித்தபடியே கூறியதாக நமிதா சபதம் எடுக்கிறார்.
ஆனால், தாமரை செல்வியோ, “நான் ஊரு Slang – ல தான் சொன்னேன்.. அதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன்” என்று இமான் அண்ணாச்சியிடம் சொல்கிறார். நல்ல உள்ளம் கொண்ட இமான் அண்ணாச்சி இந்த பிரச்சனையை சமாதான படுத்த நினைக்கிறார்.
அப்போது அந்த வழியாக வந்த நமிதாவை பார்த்து, இங்க வந்து உக்காருமா என்று நமீதாவிடம் இமான் அண்ணாச்சி கூற, என்னை மன்னித்துவிடுங்கள் இதற்கு நான் உடன்பட மாட்டேன் என்றார் கோபமாக பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டார்.
Views: -

0

0