வெளியானது பிக்பாஸ் 5 சீசன் ப்ரோமோ..! இவர்கள் தான் போட்டியாளராக பங்கேற்க போகிறார்களா?


புதிய நிகழ்ச்சிகளை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வதில் விஜய் தொலைக்காட்சி கெத்து காட்டுகிறது. அதில் முக்கியமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. 4 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசனையும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரி உள்பட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற்றப்பட்டு வருவார்கள். கடந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் சோமசுந்தர், ஷிவானி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, பாலாஜி, அனிதா, ஆரி, ஆஜித் என பலர் கலந்து கொண்டனர்

அந்த சீசனில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் இந்த ஆண்டு ஜீன் மாதம் நடக்கவிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக அக்டோபரில் வெளியாக உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

அதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானதை அடுத்து, அதில் கலந்து கொள்பவர்களின் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, ரச்சிதா மகாலக்ஷ்மி, சாந்தினி, ஷாலு ஷம்மு, ஐஸ்வர்யா, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து ஷகீலாவின் மகள் மிகா ஆகியோர் பெயர்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை எனவும், இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

2 September, 2021, 3:55 pm

Views: -

18

10

More Stories