சினிமாவில் வாய்ப்பு வழங்க படுக்கைக்கு அழைத்த நபர், வெளுத்து வாங்கிய அனிதா சம்பத் !


செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது.

இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது சமீபகாலமா, சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டுமா என்று கூறி விளம்பரப்படுத்தி விட்டு, அதைப் பற்றி விசாரிக்க வரும் பெண்களிடம் படுக்கையை பகிர வேண்டும் என்று உரிமையாக சாதாரணமாக எந்த தப்பும் செய்யாதவாறு கூச்சமில்லாமல் கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் படங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் நபர் என தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஒரு இளம்பெண்ணை ஒருவர் படுக்கைக்கு அழைத்துள்ளார்.

அதை அந்த பெண் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனிதா சம்பத்திற்கு அனுப்பியுள்ளார். அவர் கொஞ்சமும் யோசிக்காமல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிதா சம்பத்.

புதிய பட வாய்ப்புகள் தருகிறேன் என பல இளம் பெண்களும் இப்படித்தான் ஏமாறுகிறார்கள் எனவும், இதுபோன்ற பொய்யான அழைப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அனிதா சம்பத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சமூக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னதான் அனிதா சம்பத் மீது மக்களிடம் முரண்பாடு ஏற்பட்டாலும் இந்த பதிவிற்கு பிறகு அனிதா சம்பத்தை பாராட்டி வருகிறார்கள்.

6 September, 2021, 9:37 am

Views: -

2

0

More Stories