பிரம்மாண்டமாக தொடங்கிய Big Boss – 5: முதல் நாளே பஞ்சாயத்து…!

1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 நேற்று வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் வந்த ஐந்து நிமிடத்திலேயே பிரியங்கவிடம் ஓரண்டை இழுக்கிறார் நம்ம விமர்சகர் அபிஷேக். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பல சண்டைகளை பார்த்து உள்ளது. ஆனால் எந்த சீசனிலும் பஞ்சாயத்து வந்ததில்லை, அதற்காகவே பிள்ளையார் சுழி போட்டு அற்புதமாக தொடங்கி வைக்கிறார் நம்ம அபிஷேக்.

வீட்டிற்குள், இசைவாணி முதலில் உள்ளே செல்ல, பின்னால் ராஜ் ஜெயமோகன் உள்ளே வந்தார். மூன்றாவதாக மதுமிதா என்னும் மாடல் வந்தார். அதன் பிறகு வந்த அபிஷேக் மற்றும் பிரியங்கா இருவருக்கும் லைட்டாக நேற்று உரசி கொண்டதை நாம் பார்ப்போம், அதாவது சின்ன பொண்ணு என்னும் பாடகி பிக்பாஸ் உள்ளே நுழைய, அதை பார்த்தும் பார்க்காதது போல் சாப்பிட்டுக்கொண்டிருந்த பிரியங்காவை “நீங்க அவங்களுக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு சாப்பிடலாம் ஒன்னும் ஆகாது” என்று கிண்டலடித்துள்ளார் அபிஷேக். இதைக்கேட்ட பிரியங்கா லைட்டாக கோபம் அடைந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த தடவை 18 போட்டியாளர்கள் பங்கெடுக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் பெயர் இதோ:

1)இசைவாணி

2)ராஜு ஜெயமோகன்

3)மதுமிதா

4) அபிஷேக் ராஜா

5)நமீதா மாரிமுத்து

6)பிரியங்கா

7)அபினய் வாடி

8)சின்ன பொண்ணு

9)பவ்னி

10)நதியா சங்

11) வருண்

12)இமான் அண்ணாச்சி

13)இக்கி பெர்ரி

14)ஸ்ருதி

15)அக்‌ஷரா

16)தாமரை செல்வி

17)சிபி சந்திரன்

18)நிரூப் நந்தகுமார்.

4 October, 2021, 8:26 am

Views: -

1

0

More Stories