BEAST பட டைட்டில் மாற்றம்? சில்லறையை சிதறவிட்ட பேன்ஸ் அவ்வளவுதானா?

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் டைட்டில் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் 8 சதவீத கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடக்கம். ஆனால் ஸ்டாலின் போட்ட கண்டிஷனால் பல படங்கள் தங்களது டைட்டிலை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
LBET எனும் லோக்கல் பாடி என்டர்டெய்மெண்ட் டாக்ஸ் திரைப்படங்களுக்கு 8% வரியை மாநில அரசு விதித்து வருகிறது. அதை நீக்க பல வருஷமாக தயாரிப்பாளர் தரப்பு அரசிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளது ஆனால் தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு மட்டுமே அதில் இருந்து விலக்கு கிடைக்கும் என தற்போது தமிழக அரசு கறாராக சொல்லி விட்டது.
இதனால் விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் வரிவிலக்கு காரணமாக டைட்டில் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது இந்தியா முழுவதும் ரீச் ஆக வேண்டும் என்று கோபப்படுவதால் தயாரிப்பாளர் முடிவெடுத்த பின்பு தெரிய வரும். பீஸ்ட் மட்டுமில்லாமல் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டைட்டிலும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
Views: -

1

1