பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா…! இந்த நடிகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா?


சூர்யாவின் திரைவாழ்வில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் நந்தா. இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கினார். முதலில் இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து சில காட்சிகள் எடுக்கப்பட்ட பின் கைவிடப்பட்டது. அதன்பின் தான் சூர்யா இதில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் சூர்யா – விக்ரமை வைத்து பிதாமகன் என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இருந்து தான் சூர்யா, விக்ரமின் நடிப்பில் பல பரிணாமத்தை காட்டியது. பின் பாலா தயாரிப்பில் சிங்கம்புலி இயக்கத்தில் மாயாவி படத்தில் ஜோதிகாவுடன் நடித்தார். தொடர்ந்து நான் கடவுள், பரதேசி, அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படங்களை இயக்கியவர், இறுதியாக அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா படத்தை இயக்கினார். ஆனால் இந்தப் படம் வெளிவராமல் சர்ச்சை ஆனது.

இந்நிலையில் பாலாவும் சூர்யாவும் புது படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்த அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சிறப்பு தோற்றத்தில் சூர்யாவும் நடிக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

31 August, 2021, 6:49 pm

Views: -

0

0