“ஆமா, நான் தாய்கிழவிதான்..” – Live வீடியோவில் வெளிப்படையாக பேசிய அர்ச்சனா !


தமிழ் திரையுலகில் நடிகை, Vj, போல் பல முகங்களை கொண்டவர்தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ‘காமெடி டைம்’ தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார். தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்பு கேங் என்று பலர் கலாய்த்து வந்தாலும் அசராமல் சுற்றிக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பாத்ரூம் டூர் என்ற வீடியோ வை பதிவிட்டு அதன் மூலம் பலரின் கலாய்களுக்கு உள்ளானார். அது வெவ்வேறு பிரச்சினையாக உருமாறி பெரிய இடத்துக்கு வந்து நின்றது. தற்போது அதெல்லாம் தீர்ந்து சுமுகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்.

சில காலங்களாக லைவ் வராமல் இருந்த அர்ச்சனா, தற்போது தனது பிறந்தநாளுக்காக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க லைவ் வந்தார். செல்பி வீடியோவில் நன்றி தெரிவித்த அவர் வாழ்த்தியவர்களுக்கும் கலாய்த்தவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் நன்றி என்று கூறினார். அவரது குழந்தை சாரா மற்றும் அவரது கணவர் அவரை ஒரு பொது இடத்திற்கு கொண்டு வந்து சர்ப்ரைஸ் செய்ததாக கூறினார். மேலும் லைவ் இல் மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிக்கொண்டிருந்த அர்ச்சனா, பிக்பாஸ் சக போட்டியாளர் சுரேஷ் உடன் வீடியோ காலில் பேசுவது தன் மகளுடன் லைவ் இல் கலந்து கொண்டது என எல்லாம் கலந்த கலவையாக வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் சிலரின் கேள்விகள் அவரை எரிச்சலூட்டும் விதமாக அமைந்தால் அவர்களை தயவு செய்து வெளியே செல்லுங்கள், மேலும் ஆமா நான் தாய்க்கிழவி தான்” என்று வெளிப்படையாக பேசினார்.

4 July, 2021, 11:58 am

Views: -

0

0

More Stories