அரண்மனை 3 படத்தின் டிஜிட்டல் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி..!


இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ 5 நிறுவனம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் சுந்தர் சி அரண்மனை படத்தை இயக்கினார். அந்த படம் அமோகமாக வெற்றியடையவே அதை தொடர்ந்து அரண்மனை 2 எடுத்தார். தற்போது அரண்மனை 3ம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரண்மனை 3 படத்தின் சாட்டிலைட் உரிமை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு வாங்கியுள்ளது. அரண்மனை 3 படத்தின் ட்ரெய்லர் வெளியான பின்பு இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

9 October, 2021, 6:05 pm

Views: -

13

1