“அண்ணாத்த செம்ம ஸ்டைல்” கொல மாஸான பாட்டு Release !


விஸ்வாசம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினி. தீபாவளிக்கு வெளியாக போகும் இந்த படத்தோடு சிம்புவின் மாநாடு படம் மோதப் போகிறது.

மேலும், இந்த படத்தின் Motion Poster வெளியாகியது. அதில் புல்லட்டில் அரிவாளுடன் வரும் ரஜினிகாந்த் நாடி நரம்பு முறுக்க முறுக்க, இரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க, அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க தொடங்குது ஓம்கார கூத்து என்று பஞ்ச் டைலாக் பேசுகிறார். இதை வெகு விமர்சையாக கொண்டாடி வந்த ரசிகர்களுக்கு,

இப்போது இன்னொரு சர்ப்ரைஸ் இந்த படத்தின் சிங்கிள் பாட்டு ரிலீஸ் ஆகியுள்ளது. இதுவே மறைந்த பாடகர் எஸ் பி பி அவர்களின் கடைசி பாடல் ஆகும். ‘அண்ணாத்த அண்ணாத்த ‘என்னும் தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களின் ரிங்டோனாக உடனே மாறி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

4 October, 2021, 6:26 pm

Views: -

1

0