சூர்யா – வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்…! இது வேற லெவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வந்த பொல்லாதவன் படத்தின் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக காட்டியவர் வெற்றிமாறன். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆடுகளம், நான் ராஜாவாபோகிறேன், விசாரணை, வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இதில் நடிப்பதற்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளுடன் பழகி வருகிறார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே அந்த படத்தினை முடித்த கூயோடு இந்த படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் வாடிவாசல் படத்தில் நடிக்க மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் வெற்றிமாறன். அந்த வரிசையில் வாடிவாசல் படத்தில் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடிகர் அமீர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் வாடிவாசல் படத்திற்கும் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

Views: -

1

0