இது எல்லாம் Adjust பண்ணிக்க முடியாது- கோபத்தில் கொந்தளித்த தமன்னா..!


நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர். என்னதான் மேக்கப்பில் தனியாக ஜொலித்தாலும், மேக்கப் இல்லாமலும் நடிகை தமன்னா அழகாகதான் இருப்பார். இவரை பற்றி சமீபத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

அதாவது, பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்தில் இடம்பெறவிருக்கும் ஸ்பெஷல் கவர்ச்சி பாடலுக்கு நடனமாட நடிகை தமன்னாவுக்கு பலகோடி பேரம் பேசப்பட்டதாக என தகவல் வெளிவந்தது.

Tamannaah -updatenews360

இந்நிலையில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ரூ. 5 கோடி சம்பளமாக வேண்டும் என்று தமன்னா கறாராக பேசுவதாகவும், செய்திகளில் கூறப்பட்டது. இதை பார்த்த கோபமடைந்துள்ள நடிகை தமன்னா இதகை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Tamannaah Bhatia-updatenews360

அந்த பதிவில் “இயக்குனர் அணில் ரவிப்புடி மீதும், பாலகிருஷ்ணா சார் மீதும், தனக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதாகவும், படத்தில் தான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக, வரும் ஆதாரமற்ற செய்திகளை பார்க்கும் பொழுது வருத்தமாக இருப்பதாகவும், இப்படிப்பட்ட ஆதாரமற்ற செய்திகளை எழுதுவதற்கு முன் உண்மை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள் “என தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளார்.

22 May, 2023, 9:34 pm

Views: -

0

1

Tags: Tamannaah
More Stories