செம அப்டேட்.. அஜித்தின் அடுத்த படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் : இளம் நாயகனுக்கு அடித்தது ஜாக்பாட்!!

வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித்தின் பைக் ஸ்டன்ட் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்துள்ளதாக பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். வலிமை திரைப்படம் தமிழ்நாடு வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளிலேயே சுமார் ரூ. 36 கோடி வசூல் செய்து மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த AK61 படத்தை மீண்டும் வலிமை கூட்டணியே இணைய உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும் பல வருடங்கள் கழித்து தபு இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலம் இந்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இளம் நாயகன் கதைக்கு தேவைப்படுவதால் முக்கிய கதாபாத்திரம் என்பதால் இளம் ஹீரோ கவின் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதை கவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Views: -

0

0