அட.. இது நல்லா இருக்கே.. 50 வயதிலும் 20 வயதை போல் ஜெலிக்கும் ஐஸ்வர்யா ராய்யின் அழகு ரகசியம்..!


இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

aishwarya rai-updatenews360

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

aishwarya rai-updatenews360

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார்.

இதனிடையே, முன்னதாக 50 வயதை தொடங்க போகும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த வயதிலும் 20 வயதை போல் அழகில் ஜொலிக்கிறார். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதை தனது நீண்ட வருட பழக்கமாக வைத்துள்ளாராம்.

aishwarya rai-updatenews360

மேலும், கடலைமாவு, பால், தேன் சேர்த்து முகத்தில் போட்டு 10 நிமிடம் கழித்து வாஷ் செய்வாராம், இதனை மாதம் ஒருமுறை போடுவாராம்.

மேலும், தயிருடன் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து முகத்தை ஸ்க்ரப் செய்து, சந்தன எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்வது வழக்கமாம். சம்மரில் தினமும் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி கொள்வாராம் ஐஸ்வர்யா ராய்.

6 June, 2023, 9:39 pm

Views: -

0

0

More Stories