ஐட்டம் பாட்டுக்கு ஆடணும்னு அடம் பிடிச்சா….மனைவியால் அவமானப்பட்ட ஆர்யா?

1

கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பாலிவுட் நடிகையான சயீஷா ஐந்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கி தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் 17 வயது வித்தியாசமுள்ள ஆர்யாவை திருமணம் செய்து கொண்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது. இதன்பின் காப்பான் படத்தில் இருவரும் நடித்திருந்தனர்.

சில வருடங்களாக தோல்வி படங்களில் நடித்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ஆர்யாவிற்கு சார்பட்டா பரமபரை திரைப்படம் கைகொடுத்து தூக்கியது. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் அவரது மனைவி சயீஷா சிம்புவின் பத்து தல படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டார். இது நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஆர்யா, நாங்க ரெண்டு பேரும் திருமணத்திற்கு பின்னர் நடிக்கக்கூடாது, நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கக்கூடாது இப்படியெல்லாம் நாங்க சொல்லவே மாட்டோம். சொல்லப்போனால் சயீஷா எனக்கு ஏதாச்சும் ஐட்டம் பாட்டுக்கு டான்ஸ் ஆட சான்ஸ் வாங்கி தாங்க என கேட்டார். அவங்களுக்கு டான்ஸ் மீது அவ்வளவு ஆர்வம் உண்டு அப்படித்தான் பத்து தல படத்தில் ஆடினார் என கூறினார். ஆனால், அந்த பாடலுக்கு ஆடியதால் ஆர்யா மனைவியை அவர் போக்கில் விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பதாக விமர்சிப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 May, 2023, 6:49 pm

Views: -

0

0

Tags: arya, Sayyeshaa
More Stories