யாஷிகா போட்ட அந்த ” ட்வீட் ” வெளுத்து வாங்கும் “அஜித் ” ரசிகர்கள்.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட யாஷிகா


யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை . இவர் ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் . இவர் அதிகமாக கவர்ச்சி படங்களில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டுபவர். நடிகை யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றவர்.

சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் . தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் .

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி பெயரில் “ஷாலினி அஜித்குமார் ” என்று ஒரு
பொய்யான (Fake ID ) ஐடி ட்விட்டர் பக்கத்தில் துடைங்கப்பட்டுள்ளது . அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படத்துடன் இருக்கும் அந்த பொய்யான ட்விட்டர் கணக்கை நிஜம் என நினைத்து. நடிகை
யாஷிகா ஆனந்த் கமெண்ட் செய்து அஜித் ரசிகர்களிடம் சிக்கி கொண்டார்.

ஷாலினி அஜித்குமார் என்ற பெயரில் உள்ள அந்த போலியான ட்விட்டர் அக்கவுண்டில்
“முதன்முதலாக ட்விட்டருக்கு வந்துள்ளேன் என்று ஷாலினி போல் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக நடிகர்கள் , பிரபலமானோர் சமூகவலைத்தளங்களுக்கு வந்தால் அவர்களுக்கென தனி ” Verified account ” பெற்றுக்கொள்வர் . ஆனால் இது போன்று உறுதி செய்யாத பொய்யான ட்விட்டர் கணக்கை ஆதரிப்பது போல் நடிகை யாஷிகா ஆனந்த் அந்த போலி கணக்கை ” வெல்கம் மேம் ” என்று யாஷிகா கமெண்ட் செய்துள்ளார்.

நடிகர் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ( Suresh Chandra )அவருடைய ட்விட்டர் கணக்கில் , அஜீத் மனைவி ஷாலினிக்கென ட்விட்டரில் எந்த கணக்கும் இல்லை. ஷாலினி அஜித்குமார் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டிருப்பதாக ட்விட்டரில் ட்விட் செய்திருந்தார். அப்படியிருக்கும்போது ஒருத்தருடைய ஐடி ஒரிஜினலா அல்லது போலியா என்பது கூட தெரியாமல் அந்த ஐடியை Promote செய்யும் விதமாக ட்விட் செய்துள்ளாய் என்று யாஷிகாவை தல ரசிகர்கள் ட்விட்டரில் கழுவி ஊற்ற துடங்கிவிட்டனர்.

அதுமட்டுமில்லாமல் குடித்தவர் போல் நிதானம் இல்லாமல் இருக்கிறாயா என்றும் சிலர் யாஷிகாவை கழுவி கழுவி ஊற்றுகின்றனர். இதுபோன்று யாஷிகா சமூக வலைத்தளங்களில் அறியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளை நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.

2 February, 2022, 3:33 pm

Views: -

1

1

More Stories