எனக்கு wifeஆ வர்றீங்களா? வாணி போஜனின் லவ்லியான புகைப்படங்கள்…!


ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது. அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். அடுத்து, டி.வி. சீரியல், இப்போது பல படங்களில் நடித்து வரும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கிறார் வாணி போஜன். தற்போது சுடிதாரில் செம லவ்லியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், எனக்கு wifeஆ வர்றீங்களா? என கொக்கி போட்டு வருகின்றனர்.

13 October, 2021, 9:01 pm

Views: -

23

11

More Stories