தளபதி 66 First Look இதோ….என்னய்யா இது சுமாரா இருக்கு…வம்சி சார்..


பீஸ்ட் படத்தை அடுத்து தோழா, மகரிஷி படங்களின் இயக்குனர் வம்சி இயக்கத்தில், தமன் இசையில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் வந்து நடத்தினார்கள். உனக்கு இப்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது படத்தின் தலைப்பு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் என்னய்யா வம்சி, இது சுமாரா இருக்கு என்று ஆப்செட் ஆகியுள்ளார்கள்.

எப்போதும், தான் நடித்துக் கொண்டிருக்கும் படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றி யோசிப்பார் விஜய். தற்போது வாரிசு பட வேலையே இன்னும் முடியாத நிலையில் அடுத்ததாக தளபதி 67 படத்தை தயாரிக்கப் போவது லலித் அதை இயக்கப்போவது மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் என்று தகவல்கள் உறுதி ஆகியுள்ளது, மேலும் இந்த படத்தின் பூஜை தசரா பண்டிகையின்போது நடக்கும் என தெரிகிறது.

21 June, 2022, 8:02 pm

Views: -

0

0

More Stories