10 வயது குறைந்தவருடன் இரண்டாவது திருமணமா? சுரேகாவாணி விளக்கம் !


நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவரது கணவர் சிறிது நாட்களுக்கு முன் மரணமடைந்தார். அதன்பின் நடிகை சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் எனவும், அந்த மாப்பிள்ளை இவரை விட 10 வயது குறைந்தவர் எனவும் வதந்திகள் பரவின. அதை மறுத்துள்ள சுரேகா வாணி, எனக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள ஒரு யோசனையும் இல்லை எனவும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

19 August, 2021, 5:30 pm

Views: -

20

11

More Stories