நடிகை சில்க் சுமிதாவின் யாரும் பார்த்திடாத புகைப்படம் – சோசியல் மீடியாவில் வைரல் !!!


சில்க் சுமிதா ஒரு இந்திய திரைப்பட நடிகை . இவரது இயற்பெயர் விஜயலட்சுமி ஆனால் இவரை விஜயலட்சுமி  என்று சொன்னால் யாருக்கும் தெரியாது அனால் சில்க் சுமிதா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் .  தமிழில் “வண்டிச்சக்கரம்” என்கிற படத்தில் சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார் அதிலிருந்து இவரது பெயர் சில்க் என்றே பிரபலமானது . இவர்  கிட்டத்தட்ட  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450  படங்களுக்கு மேல்நடித்துள்ளார். 

கவர்ச்சிக்கு இப்போ எப்படி சன்னி லியோன், அது போல அபொழுதெல்லாம் கவர்ச்சி என்றாலே நடிகை சில்க் சுமிதா தான் .தமிழ் சினிமாவிற்கு எத்தனை கவர்ச்சி நடிகைகள் வந்திருந்தாலும் , இனி வந்தாலும் . சில்க் சுமிதா இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது , அவரை ரசிகர்களால் மறக்கவும் முடியாது. ஏனெனில் 

, கவர்ச்சி மட்டுமில்லாமல் நடனம் , நடிப்பிலும் அசத்த கூடியவர் அப்படிபட்ட ஒரு நடிகை தான் சில்க் சுமிதா . ஆனால் இவர் 1996 -ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி அளித்தது .தற்கொலைக்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .  

சில்க் சுமிதாவின்  கவர்ச்சி எல்லை இல்லாதது ,அவரின்  கட்டழகான உடம்பும் , வசீகரம் கொண்ட முகமும் பல லட்சம்  ரசிகர்கள் சில்க் சுமிதா என்னும் மோகத்தில் மிதந்தனர். நடிகை சில்க் சுமிதா மறைந்து  பல வருடங்கள் கடந்தாலும் இன்று வரை அவர் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுவருகிறார் . இந்நிலையில் சில்க்சுமிதாவின் மேக்கப் இல்லாமல் இருக்கும் அரிதான   புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது . அந்த புகைப்படத்தில் நடிகை சில்க் சுமிதா முகத்தில் மேக்கப் இல்லாமல் மிகவும் அழகாக உள்ளார். இதனை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர் .

26 October, 2021, 4:17 pm

Views: -

58

11